பாலசிங்கம் சுகுமார்
***********************************
இவரது இயற்பெயர் : பாலசிங்கம் சுகுமார் ஆகும்.
சேனையூரைப் பிறப்பிடமாகக் (18.10.1955)
கொண்டவராவர்.
ஆரம்பக்கல்வி முதல் உயர் தரம் வரை
சேனையூர் மகாவித்தியாலயத்தில் பயின்றார்..
முதல் பட்டப் படிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
தமிழ் சிறப்புக் கற்கை நெறியை மேற்கொண்ட இவர்
.
இரண்டாம் உயர் பிரிவு முது கலைமாணி பட்டப்படிப்பை
(நாடகமும் அரங்கியலும்) பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார்.
முதல் பணியை விவசாய விரிவாக்க அதிகாரியாக (குறிஞ்சாகேணி 1982) மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆசிரியராகப் பின்வரும் கல்லூரிகளில் தனது பணியைத் தொடர்ந்தார்.
சுங்காவில் மகாவித்தியாலயம் பொலன்நறுவை 1982-1986.
கல்லல அல் அசர் முஸ்லிம் மகா வித்தியாலயம் 1986-1989.
சேனையூர் மத்திய கல்லூரி 1989-1990.
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி திருகோணமலை 1990
சிறிது காலம் பிரதி அதிபராக திருகோணமலை விபுலானந்தா
1991-1992 மேற்கொண்ட வேளை,கிழக்குப் பல்கலைக்கழகம் விரிவுரையாளராக (1992-2006) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நுண்கலைத் துறை தலைவரராகவும் (2003),
கலை கலாசார பீடாதிபதியாகவும் (2004-2006), விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் இணைப்பாளாராகவும் (2004-2005) பணிபுரிந்ததோடு, அப்பதவிகளையும் இவர் அலங்கரித்தார் எனினும் அது மிகையன்று.
இதுவரை வெளி வந்த நூல்கள்
01 - பாலசுகுமார் நாடகங்கள்
02 - தமிழில் நாடகம்
03 - திருகோணமலை நாடக அரங்க பாரம்பரியம்
04 - உலக நாடக அரங்கு
05 - சூரப்பனகை இடது கை வாங்கிய இராவண தனுசு
06 - ஈழத்தமிழர் இசையும் நடனமும்
07 - Eezam Tamils dance and music
08 - ஈழ நாட்டியம்
09 - ஈழத்தில் கண்ணகி கலாசாரம்
10 - அப்புச்சி
11 - கும்பம் சேனையூர்
தொகுப்பு நூல்கள்
01 - கொட்டியாரம் இலக்கிய மரபு
02 - கரைகள் கடந்து
03 - தம்பலகாமம் பற்று
04 - சின்ன தேவதை
05 - அனாமிகா
06 - Anamika
வெளியிட்டவை
01 - மங்கையராகப் பிறப்பதற்கே - வெ.தவராஜா
02 - மட்டக்களப்பு அரங்கு மரபும் மாற்றமும் - வ.இன்பமோகன்
03 - பொன்னாவரை - சேனையூர் இரத்தினா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாசாரப் பீடத்தின்
முன்னாள் பீடாதிபதியாகவும், நுண்கலைத்துறை தலைவராகவும், சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஈழத்து இசை, நடன, நாடகப் புலமையாளர்.
தற்போது இலண்டனில் வசிப்பவர்.
புலம் பெயர் நாடுகளில் ஈழநாட்டியத்தை அறிமுகப்படுத்தி
அதற்கானப் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.
இவரின் கட்டுரைகள், நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.
அவற்றுள் மூன்று நூல்கள் நூலகம் இணையத்திலும் பதிவாகி இருக்கின்றன.
1 – திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம் (நூலகம்)
2 – தமிழில் நாடகம் (நூலகம்)
3 – உலக நாடக அரங்கு (நூலகம்)
திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம் (நூலகம்)
இந்தத் தொகுப்பில் திருகோணமலையின் மரபுவழி நவீன அரங்குகலைப் பற்றிய நான்கு ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்கால நாடக ஆய்வாளர்களுக்கும் இது பெரிதும் பயன்படும்.
தமிழில் நாடகம் (நூலகம்)
கிழக்கு மாகாணத்தில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பறைமேளக்கூத்து, தென்கோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, மகிமைக்கூத்து, வசந்தன் கூத்து போன்ற கூத்து வடிவங்கள் இன்றும் உயிரோடிருக்கின்றன.
நவீன உலகின் போக்குகளுக்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் திணறும், இந்த உயிருள்ள கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கும் பொறுப்பு நாம் ஒவ்வொருவரினதும் குறிப்பாக
நாடக ஆய்வாளரின் பொறுப்பாகும்.
இவ்வடிவங்களில் சிலவற்றை, “தமிழ் நாடகம்” என்ற தலைப்பின் கீழ் ஆய்வுக் கட்டுரைத் தொகுதியாக இந்நூல் அமைகிறது.
பாடசாலைகளிலும் பலகலைக்கழகங்களிலும் நாடகமும் அரங்கவியலும் ஒரு பயில்நெறியாக வளர்ந்துவரும் இவ்வேளையில் இக்கட்டுரைத் தொகுதி மாணவர்களுக்கும் ஆய்வாளருக்கும் பெரிதும் உதவும் எனலாம்.
உலக நாடக அரங்கு (நூலகம்)
தமிழில் நாடக நூல்கள் மிகவும் குறைவாகவே வெளிவருகின்றன.
அதிலும் அரங்கு தொடர்பான வரலாறு ஆராய்ச்சி நூல்களின் வரவு
மிகக் குறைவாகவே உள்ளன.
இந்த நூல் தமிழில் ஒரு புதிய வரவு.
இதுவரை அரங்க வரலாற்றை முமையாக உள்ளடக்கிய
ஒரு தமிழ் நூல் இல்லை எனலாம்.
அரங்க வரலாறு பற்றி ஆங்கிலத்திலேயே அதிக் நூல்கள் வெளிவந்துள்ளன.
அவ்வாறு வெளிவந்த நூல்களும் முழுமையாக அரங்க வரலாற்றைத் தரவில்லை.
பாலசுகுமாரின் இந்த நூல் தமிழில் முதல் முயற்சி என்றே சொல்லலாம். மேலைத்தேய அரங்க வரலாறு தொடக்கம்
சிங்கள அரங்க வரலாறு வரை அரங்கின் எல்லா வரலாற்று மூலங்களையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
மிக அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவை
இவரின் வாக்கு மூலமாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.
எழுத்தன் நான்...
**************************
எழுத்தை நாம் எப்போது கற்றுக் கொண்டோம்
நம் வாழ்வும் எழுத்தும் ஒன்றோடொன்று இணைந்து
பயணிக்கும் இறப்பு வரை நீளும்.
என் முப்பாட்டன் ஒரு புலவர், பாட்டன், பெரியப்பா சித்தப்பா எல்லோரும் எழுத்தர்கள்.
ஒரு கிராமசபை நூலகத்துக்கும் இவர் நன்றி சொல்ல மறக்கவில்லை.
தன்னை இந்நிலைக்கு இட்டுச்சென்ற ஆசான்களுக்கும்
இங்கே இவர் நன்றி சொல்லுகிறார்.
“பல்கலைக் கழகத்தில் இலக்கியமும் ஆய்வுமாய்
என்னை நெறிப் படுத்திய
பேராசிரியர்.சு.வித்தியானந்தன்,
பேரா க.கைலாசபதி,
பேரா கா.சிவத்தம்பி,
பேரா.இந்திரபாலா,
பேரா.அ.சண்முகதாஸ்,
பேரா.சித்திரலேகா மெளனகுரு,
பேரா.எம்.ஏ.நுஹ்மான்,
பேரா.நா.சுப்பரமணிய அய்யர்,
பேரா.மெளனகுரு
ஆகிய பெருந்தகைகளுக்கு உணர்வு பூர்வமாக நன்றிகடன் கூறுகிறார்.
தன்னைப் பற்றியும் தன எழுத்துக்கள் எப்போதும்
எதிர்நீச்சல் போடும் ஆற்றல் படைத்தவை
என்பதனை இங்கே மிகவும் ஆணித்தரமாக நிறுவுகிறார்.
“என் தொழில் எழுத்தும் கலையும் இலக்கியமும்தான்.
ஜடம் அல்ல உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும்
நிரம்பி வழியும் நான்.
கற்பனையும் யதார்த்தமுமாய் பயணிப்பவன்.
கால வெள்ளம் என்னைப் போன்றவர்களை
அடித்து கரைத்து விட முடியாது.
எதிர் திசையில் பயணிக்கும் என் எழுத்துக்கள்”.
இத்தகைய ஒரு கலைமாமணிக்கு
பூமாலை சாற்றினால்
வாடிவிடும் என்றெண்ணி
நான் இங்கே பாமாலை சாற்றுகிறேன்.
கலைவாணி அருள் பெற்ற
கலைஞன் இவனென்று
கற்றோரும் மற்றோரும்
கவிமாலை சாத்தட்டும்!!
வையம் வாழ்த்தட்டும்!!
வானமழை பூத்தூவட்டும்!!
உன்பணி கண்டு வாழ்த்துரைக்க
என் எழுத்தாணி நகரட்டும்!!
****************************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/09/2016

No comments:
Post a Comment