சங்க காலத்தில் கண்டதும் காதலும் இருந்துள்ளது. குறுந்தொகையில் (305) குப்பைக்கோழியாரின் ஒரு பாடல்..
கண் தர வந்த காம ஒள்ளி
என்பு உற நலியினும் அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே…..
அவரைக் காட்டிய கண்கள் தந்ததனாலே வந்தடைந்தது காமமாகிய இந்த ஒள்ளீய நெருப்பு. இது என் அன்பையும் உருக்குமாறு என்னை நலிவித்தாலும், அவர்பால் நாமே விரும்பிச்சென்று, அவரை தழுவதற்கு நாம் அரிதான காட்சியினர் ஆனோம்.
தற்செயலாக ஒரு ஆடவனும், ஒரு பெண்ணும் கண்ணால் உள்ளத்தை பறிகொடுக்கின்ற்னர். அடுத்த நாளும் ஆடவன் அதே இடத்திற்கு வருகிறான். அவனுக்கு முன்னால் அப்பெண் அங்கு நிற்கிறாள். அவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன் ஆடலும், தொடுத்தலும் செய்யாது தனித்து நிற்கும் நீ யாரோ: உனக்கு என் வணக்கம். கண்டவர் கண்ணைப் பற்றிக்கும் அழகியே! கடல்வாழ் தெய்வமோ நீ! என்று நற்றிணையின் இப்பாடலில் பயிலப்பட்டுள்ளது.
யாரை யோநிற் றொழுதனம் வினவிதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ (155)
மற்றொரு பாடலில் குறுந்தொகை (49) அம்மூவனார் என்ற புலவர், பிரியாத பேருறவை எழுதிச்செல்கிறார். பல நாட்களூக்குப்பிறகு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் அவளை சந்திக்கும்போது தலைவியின் துயரமெல்லாம் நீங்கியதை அப்போது தலைவனிடம் கூறும் கூற்று…
….இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கிரென் கணவனை
யானா கியர் நின் நெஞ்நேர் பவனே.
அதாவது இப்பிறப்பானது மாறிப்போய் மறுபிறப்பு என்று இருந்தால், என் கணவனாக நீயே ஆவாயாக. நின் மனமொத்த மனிவியும் யானே ஆகி அமைவேனாக என்கிறாள்.
அகநானுறில் பரணர் (பாடல் 122) காதலில் எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை இந்நெடிய பாடலில் எழுதிச்செல்கிறார். இப்பாடலின் முதல் ஐந்து அடிகள்..
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்……..
கள்ளைப் பருகி களித்தாடும் மக்கள் வசிக்கும் பழமையான ஊர், இப்போது விழா நடைபெறவில்லையாயினும் உறக்கம் கொள்ளாமல் இருக்கிறது. ஒலி அடங்கினாலும் , உரத்த குரலுடன் பேசும் கொடிய சொற்களைக் கொண்ட நம் அன்னை உறங்கமாட்டாள். நம்மைப் புறம் போகவிடாது காவல் செய்யும் அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினாலும் உறங்காத காவலைக் கொண்ட ஊர்க்காவலர் விரைந்து சுற்றி வருவர்.ஒளி பொருந்திய வேலையுடைய அக்காவலர்கள் உறங்கினாலும் கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையுடைய நாய் குரைக்கும் . என இப்படி போகிறது இப்பாடல்.
கலித்தொகையில் ஒரு பாடல். வீட்டில் பந்தாடியிருந்தாள் ஒரு கன்னி.தெருவுக்கு சென்ற பந்தை எடுக்கையில், அவளைக் கண்ட ஒருவன் மயங்கினான்.பிதற்றினான்.”என் அறிவை தன் வசமாக்கி கொண்டு போய்விட்டாளே” என ஏங்குகிறான். நெடிய பாடலிருந்து சில வரிகள்(குறிஞ்சிக்கலி-21)
வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்பக்
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின் கண் கண் கவர்பு ஒருங்கு ஓட
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்……….
பொருள்: மூங்கிலைப்போல் திரண்ட தோள்,ஐந்து வகையான மனம் கமழும் கூந்தல், மானின் மருண்ட பார்வை மயிலின் சாயலோடு உடையவளே..சிலம்பு,பரல் ஒலி முழங்க,ஆபரணங்கள் ஒளீ வீச, அணங்கு என தளர்ந்து அசைந்து வருகிறாய்..உன் இடையில் என் கண்கள் களவாகப் பார்த்தன.செல்வம் நிறைந்த உயர்ந்த சிறப்புடைய உன் தந்தையின் பழைய பெருநகரில் இளமை வேகத்தால் வெளீயே பந்தை எறிந்துவிட்டு பந்தின் பின்னால் ஓடிவந்தவளே!
சங்கக் காலத்தில் மடலேறுதல் என்ற பழக்கம் உண்டு. மடலேறுதல் என்பது காதலில் தோல்வியுற்ற தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு மலரை சூடிக் கொண்டு குதிரை ஒன்றில் ஊர்ந்து, காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு போவதாகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை.
மடலேறுதல் அரங்கேரும் பாடலை எழுதியவர் அள்ளூர் நன்முல்லையார்.
காலையும், பகலும் கையறு மாலையும்,
ஊர்துஞ்சு யாமமும், விடியலும், இன்றுஇப்
பொழுதுஇடை தெரியின், பொய்யே காமம்;
மாவென மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே - பிரிபுதலை வரினே!
பொருள்:பொருள் தேடச் செல்லலாம் என்று நினைத்த தலைவன் தன் காதலியை எண்ணிப் பின்தங்கிவிட்டான். காலை, பகல், மாலை, யாமம், விடியல் என்று எந்த நேரத்திலும் காமம் பொய்யாகிவிடுகிறது. அது மெய்யாகிக் கிட்டுவதற்கு மடலேறலாம் என்றால் ஊர்மக்கள் பற்றிய நினைவு வருகிறது. ஊர்மக்கள் என்னைத் தூற்றினால் எனக்குப் பழி. ஊர்மக்கள் என்னை வாழ்த்தினால் என் காதலியின் பெற்றோருக்குப் பழி. எனவே மடலேறுதலும் தக்கதன்று. என்ன செய்வேன்? என தடுமாறி கண் கலங்குகிறான்.
ஆக சங்க இலக்கியங்கள் 1862 அகப்பாடல்களை உடையன. ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளது. ஆக 1862 பாடல்களையும் கற்றால் 3724 காதல் உள்ளங்களை நாம் அறியலாம்.
இப்பதிவை எழுதியதற்கு தெ.பொ.மீ, வ.சு.ப.மாணிக்கம் மற்றும் புலியூர்க் கேசிகன் எழுதிய நூற்கள் உதவியது.
வாசுதேவன்
தமிழ்நாடு

No comments:
Post a Comment