வானுள்ள வரை நிலைத்து வாழ்க…
------------------------------------------------------
சேனையூர் செய்த தவம்- தமிழ்
சிறப்பெனக் கிடைத்த வரம்..
ஆனைபோல் எமக்குப் பலம் -இவர்
இயலிசை நாடகச் சுரங்கம்..
.
வெய்யோனெ மலர்ந்தோன் - மன
ஐயமெல்லாந் தெளிந்தோன்..
மெய்யாய்ப் புகழ் பூத்தோன் - நற்
செய்கைத் திறன் சேர்ந்;தோன்…
.
கலைகள் இவர் வசமே – அகக்
கண் விழிப்பவர் வரமே..
அலையில்லா ஆழ் கடலே. - பெரும்
அறிவால் இவர் நிறைகுடமே…
.
பதவிகள் சிகரத்தில் சேர்த்தாலும் - நிதம்
பணிவெனும் அணியுடை மேலாளர்..
உதவிகள் செய்வதில் உத்தமர்- நல்
அணியென அன்பினைக் கொண்டவர்..
.
அகவை அறுபதைத் தாண்டலாம் - இவர்
அகமென்றும் இளமையில் நிலைக்குமே..
புகழாரம் எப்போதும் இவர்மார்பில் -என்றும்
பசுமையாய்ப் பல்லாண்டு வாழுமே…
தமிழன்னை தாங்கிடும் சேயென- கலைத்
தெய்வமே தேடிடும் தாயென,
தனித்துவம் மாறாத ஆணென – நற்
தலைமையாய் நிறைவாக வாழ்கவே…
தமிழ் வாழ்வுள்ளவரை
கலை உயிர்ப்புள்ளவரை
சுதாகரி
செங்கலடி
No comments:
Post a Comment