Monday, 12 September 2016

கோணேசர் கல்வெட்டு கூறும்" மருங்கூர் தானத்தார்" -விஜயராஜா எட்வின்

கோணேசர் கல்வெட்டு கூறும் மருங்கூர்தானத்தார்’ - விஜய்
இலங்கைத் தமிழரின் வரலாற்றைக்கூறும் நூல்களில் ஒன்றான கோணேசர்கல்வெட்டு கூறும் மருங்கூர் தானத்தார் பற்றி ஆராய்வது  இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஏட்டுப் பிரதியாக இருந்த கோணேசர்கல்வெட்டு முதன் முதலாக வல்வை.சின்னத்தம்பிப்பிள்ளை அவர்களால் 1887ஆம் ஆண்டிலே அச்சிட்டு வெளியிடப்பட்டது.தொடர்ந்து பல பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1993 ஆம் ஆண்டில் பண்டிதர் .வடிவேல்என்பவரால் பதிக்கப்பட்டதும் முதன்முதலாகஅவரால் உரையெழுதப்பட்டதும் பேராசிரியர்சி.பத்மநாதன் அவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புக்களையும் கொண்டதுமானகோணேசர் கல்வெட்டு என்னும் நூலைமையமாகக் கொண்டமைகிறது இக்கட்டுரை.
கோணேசர் கல்வெட்டு
கோணேசர் கல்வெட்டு>கவிராஜவரோதயன் என்பவரால்;பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.எனினும் இந்நூலை முற்காலச் சரித்திரநிகழ்ச்சிகள் பற்றி விபரிக்கிற நூலாகவேகொள்ள வேண்டியுள்ளதுஏனெனில்இந்நூல்இதற்கு முன்னர் தோன்றிய செப்பேட்டுப்பெரியவளமைப் பத்ததி யை மூலநூலாகக்கொண்டே எழுதப்பட்டுள்ளதுமேலும்>இந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் குளக்கோட்டுமன்னன் சொற்படி சொல்லனவே / கல்வெட்டுப்பாட்டெனப் பாடினான் ..." எனவரும் அடிகள்>குளக்கோட்டு மன்னன் சொல்லி வைத்தவிஷயங்களை கல்வெட்டாகப் பாடியதாகவேகூறுகிறதுஎனவே இந்நூல் பதினேழாம்நூற்றாண்டிற்கு முற்பட்ட காலச் சரித்திரநிகழ்ச்சிகள் பற்றி அதாவது குளக்கோட்டுமன்னன் காலத்து சரித்திர நிகழ்ச்சிகள் பற்றிக்கூறுகின்ற நூலாகவே கொள்ளவேண்டியுள்ளது.
அதேவேளை, திருகோணமலைப்பிராந்தியத்திலுள்ள சாசான வரலாறுகளையும்அவற்றின் பொருள் மரபினையும்அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஒருதொடர்ச்சியான இலக்கிய மரபினைப்பிரதிபலிக்கின்ற நூலாகவே கோணேசர்கல்வெட்டு அமைந்துள்ளது எனப் பேராசிரியர்சி.பத்மநாதன் குறிப்பிடுகின்றமையையும்கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோணேசர் கல்வெட்டு கூறும் மருங்கூர் மற்றும் தானத்தார்
கோணேசர் கல்வெட்டுகுளக்கோட்டுமன்னன் கோணேஸ்வரக் கோயில்தொழும்புகள் செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து குடிமக்களை அழைத்துக்கொண்டு வந்து திருகோணமலையில்குடியமர்த்தியதையும்அந்தக் குடிமக்களைநீதிதவறாமல் ஆட்சி செய்தவற்கு குறுநிலமன்னர்களைப் போல வன்னிமைகளைஅமர்த்தியதையும் விபரிக்கின்றது. கோணேசர் கல்வெட்டின் இரண்டாம் பாடலில்>
“சொல்லரிய திரிகயிலைப்பெருமையெல்லாம்தூயபுராணக்கதையிற் சொன்னதுண்டு
வல்லதொரு வன்னிமையுந்தானத்தாரும் வரிப்பத்துமாமிவர்கள்வந்தவாறும்
நல்லதொரு பூசைவிதி நடக்குமாறும்நடந்தனதன்மே லினிநடக்கும்நடத்தையாவும்
சொல்லனவே சோதிடத்தின்நிலையேகண்ட கவிராசன்வருங்காலஞ்சொல்லும் சீரே.
என வன்னிமைதானத்தார்வரிப்பத்தர்ஆகியோர்கள் வந்தவாற்றை’ கவிராசன்சொல்லத் தொடங்கினான் என்ற தகவல்கூறப்படுகிறது.
ஐந்தாம் பாடலில் மருங்கூரிலிருந்துவளவரின் நல்லோரை திருகோணமலையில்குடியேற்றியமை பற்றிய தகவல்கூறப்பட்டுள்ளதுஆறாம் பாடலில்மருங்கூர்வளவரின் நல்லோர் அதாவது தானத்தார்பற்றிய தகவல்கள் கூறப்பட்டள்ளன.
இத்தலத்தில் அரன் கயிலைஆலயத்தில் இயன்ற அறைதனில் முதல்இருப்பு நாட்டி
நித்தம் வரவாகும் பொருள்களோடுநிதம் பூசைச் செலவெழுதநியமஞ்செய்து
அத்தர்முன்னர் ஆலாத்தி நடனமிடல்பன்றிகுற்றல் அதிகப்பட்ட அரனுக்கீதல்
இத்தனையும் தானத்தார்செய்வீரென்ன எழுகுடிக்குஇராயப்பட்டம் ஈந்தன் வேந்தன்.
இப்பாடல் மூலம் தானத்தார்; இருப்பு மற்றம்செலவெழுதல்அத்தர் முன்னர் ஆலாத்திஎடுத்தல் நடனமிடல்பன்றி குற்றல்>அதிகப்பட்ட அரனுக்கீதல் (அரனுக்கு பட்டாடைஇடல்என்பவற்றை செய்வீரெனகுளக்கோட்டான் பணித்தமை பற்றிய தகவல்கூறப்பட்டுள்ளது.
உரையில்இறைவன் திருவுலா வரும்போதுதானத்தார் குடியைச் சேர்ந்த பெண்கள்ஆலாத்தி எடுக்க வேண்டுமென்றும்>இன்னின்ன குடியைச் சேர்ந்தவர்கள்நடனமாடவும்பன்றி குத்தவும்அரனுக்குப்பட்டாடை இட வேண்டுமெனவும் திட்டம்பண்ணி…” யதாகக் கூறப்படுகிறதுஉரையில்இன்னின் குடியைச் சேர்ந்தவர்கள் என வரும்பகுதி மயக்கத்தை தருவதாக அமைகிறது.ஆனால் செய்யுளில் தானத்தார் கடமைபற்றியே விபரிக்கப்பட்டிருக்கிறது.
குடியேற்றங்கள் பற்றிய விபரங்களைக் கூறும்கோணேசர் கல்வெட்டின் உரைப்பகுதியில்>மருங்கூர் வன்னிபம் எனவும் குறிப்பிடப்பட்டுபலருடைய பெயர்கள்செய்ய வேண்டியதொழும்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளனஆனால்தானத்தரை வன்னிபமாகக் கொள்ளமுடியுமா என்ற வினா எழுகிறதுஅதேவேளை,கோணேசர் கல்வெட்டின் உரைப்பகுதியில்;குடிகளுக்குரிய பணிகள் பலவாறாகவும்கூறப்பட்டுள்ளது.
கோணேசர் கல்வெட்டில் கூறப்படும்மருங்கூர் மற்றும் தானத்தார் பற்றிய தேடல்,இலங்கைத் தமிழரின் வரலாறு பற்றிய புதியதகவல்களை வழங்கக் கூடியதொன்று


முற்காலப் பாண்டியர் துறைமுகப்பட்டினமான மருங்கூர்
மருங்கூர்ப் பட்டினம், முற்காலப் பாண்டியர் துறைமுகங்களில் ஒன்றாகும்முற்காலப் பாண்டியர் துறைமுகப் பட்டினங்கள்என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டசங்க காலத்து பாண்டியர் துறைமுகங்களாகும்.முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும்பெயர் பெற்றிருந்த முற்காலப் பாண்டியர்துறைமுகப் பட்டினங்களில் கொற்கை>மருங்கூர்அழகன் குளம் போன்றவைகுறிப்பிடப்படுகிறதுமருங்கூர் துறைமுகப்பட்டினமாக விளங்கிய காலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கிய அழகன்குளம்கி.மு.நான்காம் நூற்றாண்டு முதல்கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன்விளங்கி இருந்துள்ளது.
மருங்கூர்ப்பட்டினம் துறைமுகத்தைப்பற்றி நக்கீரர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.இப்பாடல்களில், மருங்கூர்ப்பட்டினம்வங்கக்கப்பல்களில் வாணிகம் செய்வோர்வாழுமிடம் எனவும், கடலோர ஊணூரைஅடுத்து மருங்கூர்ப் பட்டினம் இருந்தது எனவும்,ஊணூர் அரசன் தழும்பன்; மருங்கூர்ப்பட்டினஅரசன் வழுதி, அரசன்  வழுதி, ‘பசும்பூண்-வழுதி’ எனச் சிறப்பிக்கப்படுகிறான் எனவும்அகநானூறு 227-18, நற்றிணை  258 மற்றும் 358ஆம் பாடல்களில் குறிப்பட்டுள்ளன  என்ற தகவல்களை விக்கிபீடியா தருகிறது.
 சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியில்கப்பல்கள் இத்துறைமுகத்தில்தங்கிருந்த காட்சி வெள்ளத்தைமுற்றுகையிடும் மலை போல்காட்சியளித்தாகவும், மருங்கூர்பட்டினமும்ஊனூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர்எனப் பெயர் பெற்றிருந்தன எனவும்கூறப்பட்டுள்ளதுநெல் என்பது சாலி எனவும்வழங்கப்படுவதால் நெல்லூர்சாலியூர் எனவும்வழங்கி இருக்கலாம்எனவே தாலமி என்றகிரேக்க அறிஞர் கூறியுள்ள சாலியூர் இந்தச்சாலியூரே என நாம் கருதலாம் என்கிறார்சொப்னா தனது பாண்டியர்துறைமுகப்பட்டினங்கள் என்ற கட்டுரையில்.
மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும்>காயல்களையும் உப்பங்கழிகளையும்செல்வம்கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டுவிளங்கியதை பாண்டி நாட்டுப் புலவரானநக்கீரர் 'விழுநிதி துஞ்சும் நீறுபெறு திருநகர்>இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து>எல்லுமிழ் ஆணவம்' (அகம்: 227:19-21என்றும்காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும்மதிலையும் அகழியையும் கொண்டுவிளங்கியதை 'கடிமதில் வரைப்பின் ஊணூர்உம்பர்  (அகம்; 227: 18)> என்றும் ஊணூரைச்சூழ்ந்து வயல்கள் இருந்ததை 'முழங்குகடல்ஓதம் காலைச் சொட்கும் நெல்லின் ஊணூர்என்றும் மருதன் இளநாகனார் குறிப்பிடுவதைச்சுட்டிக் காட்டுவார் மயிலைசீனி.வேங்கடசாமி.
தென்னிலங்கை வளஞ்சியர்
பாண்டியர் துறைமுக மற்றும் வணிகநகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ளபகுதிகளிலும் ஏற்றுமதியைக்கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள்>பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர்மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள்>இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டுவணிகர்கள் போன்றவர்கள் அமைத்தநகரங்களும் பட்டினங்களும் இருந்தன.அவற்றுள் மலை மண்டலத்து குதிரைச்செட்டிகள்நகரத்தார்-மணிக்கிராமத்தார்>சாமகபண்டசாலிகள் – நானாதேசிகள்>திசையாயிரத்து ஐநூற்றுவர்பதினெண்விசயத்தார்-தென்னிலங்கை வளஞ்சியர் எனப்பல வணிகக் குழுக்கள் இருந்துள்ளன
தென்னிலங்கை வளஞ்சியர்>தென்னிலங்கையிலிருந்து பாண்டியர்பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள்.இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை>சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததைஅடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில்அக்காலத்தில் நிலையானதொன்றாய்இருந்ததை அறிய முடியும் என்ற கருத்துப்பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடுமியான்மலைக் கல்வெட்டு கூறும்மருங்கூர் மற்றும் தானத்தார்
தமிழகத்தின் தொன்மையானகுடுமியான்மலைக் கல்வெட்டில் மருங்கூர்>தானத்தார் பற்றிய தகவல்களுடன் ஈழம் பற்றியசில தகவல்களும் கூறப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுக்கள் பற்றிய தகவல்களை ‘மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும்என்ற மூன்று தொடர் கட்டுரையில் விளக்கியிருக்கிறார் இரா.கலைக்கோவன். 
கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 - 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே வழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன. இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. “குன்றியூர் நாட்டை உள்ளடக்கியிருந்த கோனாடு பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் தொடக்கத்தில் இரட்டாயாடி கொண்ட சோழவளநாடாகவும் பின்னர்கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாடாகவும் அறியப்பட்டது” என்கிறார் இரா.கலைக்கோவன்.
குடுமியான்மலைக் கல்வெட்டில்மருங்கூர் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  நலங்குன்றத்துகைக்கோளார் ஜயதுங்கநாயகன், இறைவன்தேவதானமான மருங்கூரை விலைக்குப்பெற்று அனுபவித்து வந்தார்கோனாட்டுநாட்டாரும் கோயில் தானத்தாரும்அந்நிலத்துக்குரிய பங்காகஜயதுங்கநாயகனைத் திருக்கோபுரத்திருப்பணிக்கு மூன்று அச்சு அளிக்குமாறுசெய்தனர் என்ற தகவல் ஒரு கல்வெட்டில் (131)கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மா நிலத்துக்குகடைமை, வினியோகம் உட்பட எண்கலநெல்லும் கீழிறையும் என மருங்கூர் நிலம்முழுமைக்கும் வரி இறுக்குமாறு செய்தனர்.இம்மருங்கூர் நிலம் பின்னாளில் சண்டேசுவரவலையாகபட பொன்னம்பலவன் உய்யவந்தபெருமாளான காங்கேயருக்குக் காணியாகவிற்கப்பட்டதுஜயதுங்கநாயனின்உறவினரான புவனிமுழுதுடையபல்லவதரையன்அவரும் அவருடையபிள்ளைகளும் மருங்கூரில் இல்லாமையால்நிலம் பற்றிலியாக உள்ளதொன்றுகாங்கேயராயரிடம் சொன்னார்என்ற தகவல்ஒரு கல்வெட்டில்(131) கூறப்பட்டுள்ளது.
குடுமியான்மலைக் கல்வெட்டில்தானத்தார் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  குடுமியான்மலைக்கல்வெட்டுக்களில்கோனாட்டுக் காரையூரில்மன்னர் வீரபாண்டியர் இருந்தபோது கோயில்தானத்தார் சந்தித்துக் கோயிலுக்குச்சொந்தமான மேல்மணநல்லூரில் நிலத்தைஇறையிலியாக்க வேண்டினர்.”, (53) “கடலடையாதிலங்கை கொண்டசோழவளநாட்டு நாட்டாரும் கோயிற்தானத்தாரும்..” நிலம் விற்றமை(117)தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வீரபாண்டியரின் பதின்மூன்றாம்ஆட்சியாண்டில் நலக்குன்ற இறைவனின்திருக்கற்றளி சீர்குலைந்தமையாலும்அக்குலைவை நேர் செய்யப் பொருள்இல்லாமையாலம் கடலடையாதிலங்கைகொண்ட சோழ வளநாட்டாரும் கோயில்தானத்தாரும் இணைந்து இறைவன்திருநாமத்துக் காணியாக விளங்கியஇலுப்பைக்குடிக் குளம், வயல் இவற்றுள் ஒருபகுதியை நலக்குன்றத்து தேரடியார்தக்கையாண்டாள் மகள் நாச்சிக்கு 73,3000 அன்றாடு நற்புதுக்காசுக்கு விற்றனர், (45)இந்நிலத்திற்கான ஆவணமொன்றிலும்நாட்டார் சிலரும் கோயில் தானத்தாரும்கையெழுத்திட்டுள்ளனர்கையீடு எனும்அவ்வோலைஇவ்வாவணத்தில் நாட்டாரையும்தானத்தாரையும் கிழிப்புணையாகபணமுடிப்பிற்குப் பொறுப்பாளர்களாகஅடையாளப்படுத்துகிறது (46) கோணாட்டுமுத்தரையன் உள்ளிட்டாருக்கு அவர்தம்செயற்பாடுகளைச் சுட்டி கோயில் தானத்தார்பிடிபாடு அளித்தனர்அவரின் சில செயல்கைளஇனி வேண்டாம் என்றும் சில நன்மைகளைமட்டும் செய்யுமாறும் தானத்தாரும் ஊராரும்தேவப்படும் நன்மைக்கு உண்டான செயல்கள்செய்து இருக்குமாறு உத்தரவாயிற்று. (142)போன்ற தகவல்களும் இக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன.
குடுமியான்மலையிலுள்ளகல்வெட்டுக்களில்முதற் பராந்தகனின்முப்பத்து மூன்றாம் ஆட்சியாண்டின் போது ஈழப்போருக்குச் சென்ற பராந்தகன் பற்றிக்கூறப்பட்டுள்ளதுஈழமும் கொங்குமண்டலமும் கொண்டு வல்லானை வென்றபெரும்பற்றப்புலியூரில் வீராபிஷேகம்>விஜயாபிஷேகம் செய்து கொண்டவராகவீரபாண்டியரைப் பெருமைப்படுத்துகின்றன.என்கிறார் இரா.கலைக்கோவன்.
இக்கல்வெட்டுக்கள் பலகாலத்திற்குரியனவாகும்சில முற்பட்டவை.பலவற்றின் காலத்தை கி.பி 7 ஆம்நூற்றாண்டாக அல்லது அதற்குச் சற்றுமுற்பட்டதாகக் கொள்ளலாம்.
திருவண்ணமாலைக் கோயில்கல்வெட்டுக்களிலும் கோயில் அதிகாரிகளில்ஒருவராக தானத்தார் என்போர்குறிப்பிடப்பட்டுள்ளனர்.(2)கும்பகோணத்திலுள்ள தலைஞாயிறுஎன்றழைக்கப்படும் கருப்பறியலூர் கோயில்கல்வெட்டுக்களிலும் தானத்தார் பற்றியகுறிப்புக்கள் உள்ளன.(3)
முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுகள்வளஞ்சியரைதென்னிலங்கை வளஞ்சியர்என குறிப்பிடப்படுகின்றனவேள்விக்குடிகோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும்திசையாயிரத்து நூற்றுவரும் கட்டச்செய்தனர்எனக் இக்கல்வெட்டு கூறுகிறது. (4>5)தென்னிலங்கை வளஞ்சியர் மற்றும் வளஞ்சியர் தொடர்பான தகவல்கள்வேள்விக்குடி கோவில் பற்றியும் கண்டியூர்பற்றியும் தொடர்புபட்டுள்ளதுவேள்விக்குடி, கண்டியூர் தொடர்பான தகவல்கள் இலங்கைத்தமிழர் பற்றிய பல தகவல்களைத் தருவன.
இத்தகவல்களினூடாக, கேரளப்பகுதியில் வாழ்ந்த ஈழவர் சமூகம் பற்றியும்அறிந்து கொள்ள முடிகிறதுஅதேவளை,திருக்கோணேஸ்வரம் உட்பட வேறு சிலஈழத்துக் கோவில்கள் பற்றிய தகவல்கள்நாயன்மார் காலத்தில் தமிழகத்தில்அறிமுகமாகியிருந்தமை பற்றியும் அறியக்கூடிய வாய்ப்புண்டுஇவை, தனித்து ஆய்வுசெய்யப்பட வேண்டிய  விடய ங்களாக அமைகின்றன.
கன்னியாகுமாரி மாவட்டத்தில்அமைந்துள்ள மருங்கூர்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் மருங்கூர்என்ற ஊருண்டுஇது கன்னியாகுமாரிமாவட்டத்தில் அமைந்துள்ள ஒருபேரூராட்சியாகும்சுதந்திரத்துக்குப்பின்கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரிமாவட்டம்பின்னர் மக்களின் தொடர்போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன்இணைக்கப்பட்டது. மாவட்டத் தலைநகர்,நாகர்கோவில்.
முற்காலப் பாண்டியர் துறைமுகமாகவிளங்கிய மருங்கூர்ப் பட்டினமே, தற்போதுமருங்கூர் என அழைக்கப்படுகிறது போலத்தெரிகிறதுசிலர் அழகன் குளமே மருங்கூர்ப்பட்டினம் எனக் கூறுகி ன்றனர்.
இம்மருங்கூர் பற்றிய தகவல்களைவிக்கிபீடியா உட்பட பல்வேறு வலைத்தளங்கள்மூலம் அறிந்து கொள்ளலாம்இம்மருங்கூரின்அயலில் கொட்டாரம்நல்லூர்புத்தளம் ஆகியபேரூராட்சிகள் உள்ளனதிருகோணமலையில்கொட்டியாரம்நல்லூர் என்ற பெயர்கள்பிரசித்தமானவைஇம்மருங்கூர்சங்ககாலப்புலவர்களான மருங்கூர் கிழார்பெருங்கண்ணனார்மருங்கூர்ப் பட்டிணத்துச்சேந்தன் குமரனார்மருங்கூர்ப் பாகை சாத்தன்பூதனார் ஆகிய சங்கப் புலவர்கள் வாழ்ந்தஇடமுமாகும்.
கோனேசர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதானத்தார் என்னும் சமூகத்தினர்திருகோணமலையில் வாழ்ந்தமைக்கான வேறுதகவல் ஆதாரங்களும் உண்டுதானத்தார்என்னும் குடிகள் பற்றிய செய்திகள் தம்காலத்தில் மக்கள் மத்தியில் நிலவியதைஅறிந்துகோணேசர் கல்வெட்டுமுன்னுரையில் கூறியிருக்கிறார் .வடிவேல்.இலங்கைத் தமிழரின் வரலாற்றைக் கூறும்மற்றொரு நூலான வையாபாடலிலும் மருங்கூர்மற்றும் தானத்தார் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

1. கோணேசர் கல்வவெட்டு>கவிராஜவரோதயன் இயற்றியது. 1993.


2. சொப்னா, 2012. பாண்டியர்துறைமுகங்கள், சொப்னா, 2012

2. சங்க இலக்கியங்களில் வங்கக்கடல்துறைமுகங்கள்

 (http://vairamani-lakshmi.blogspot.com/2015/09/blog-post_97.html)


4. இரா.கலைக்கோவன்.  ‘மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும்


No comments:

Post a Comment