பாலசுகுமார் மணிவிழா
-----------------------------
முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக கலைப் பீடாதிபதி அண்ணன் பாலசுகுமார் மணிவிழா காண்கிறார்.கலை,இலக்கியம்,சமூகம்,அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் அறியப்பட்ட பாலசுகுமார் இந்த சமூகத்தின் தேவைகளுக்கு அவசியமானவர்.
மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட அவர் இதுவரையும் யாராலும் அறியப்படாத மூதூர் பிரதேச சிறப்பு அம்சங்கள் கலை,இலக்கியம்,வரலாறு என்பவற்றை பலரும் அறியும் வண்ணம் தகவல்களை வழங்கி வருகிறார்.தங்கத்துரை மூதூர் என அறியப்பட்டபோதும் அந்த மூதூரையும் அதன் அழகையும் அஅறிந்த தருபவர் அண்ண்ன் பாலசுகுமார் அவர்களே.
தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டு கவனிப்பார் இன்றி இருந்த பறை இசைக் கலையை பேராசிரியர்,மௌனகுருவுடன் இணந்து புதுவடிவம் கொடுத்த புரட்சியாளர் பாலசுகுமார்.பதவியால் உயரந்தபோதும் பாமரத்தனமாகவே நண்பர்களுடன் உரையாடுவது அவரின் சிறப்புஅம்சம்.பாமரத்தனமான நகைச்சுவை என்பது அவரின் இயல்பான உரையாடலில் காணலாம்.
சுனாமியில் அவரின் உயிரான மகள் அனாமிகாவை இழந்தபோதும் அந்த கண்ணீரிலும் கிழக்கின் சோகத்தையும் என்னுடன் பகிரந்தது அவரின் பரந்த சமூக ஈடுபாட்டின் அடையாளம் எனலாம்.
புலம் பெயர நிர்பந்திக்கப்பட்டபோதும் மனத்தால் புலம்பெயராமல் ஊர்,உறவுகளுடன் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்.அவர் பற்றிய மணிவிழா மலர் அவரின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு அறியத் தரும்.
அன்பாலும் அறிவாலும் உயர்ந்த மனிதர் பாலசுகுமார் .அவரின் மணிவிழா மலர் சிறப்பானதாக வெளிவரட்டும்.அவரை வாழ்த்த எனக்கு வயது இல்லை.நான் வயதாலும் அறிவாலும் சிறியவன்.பெரியவர்கள் வாழத்தட்டும்.
விஜய பாஸ்கரன்
கண்டா

No comments:
Post a Comment